யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவனொருவர் படுகாயம்
யாழ். (Jaffna) நெல்லியடி பகுதியில் ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் மாணவன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த மாணவன், தனியார் கல்வி நிலையத்தில் கல்வி கற்றுவிட்டு கற்றல் நிறைவடைந்த பின்னர் தனது துவிச்சக்கர வண்டியில் சென்றுகொண்டிருந்தவேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் அனுமதி
மாலிசந்தி பகுதியிலிருந்து புளியடி சந்தி நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், மாணவனின் துவிச்சக்கர வண்டியும் மோதி ஏற்பட்ட இந்த விபத்தில் மாணவன் படுகாணமடைந்துள்ளார்.
இந்நிலையில், காயமடைந்த மாணவனை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சக மாணவர்கள் கொண்டுசென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
