இரணைமடு குள கமக்கார அமைப்புகளின் சம்மேளனம்! 8 வருடங்களாக எந்தவொரு ஆய்விற்கும் உட்படுத்தப்படாத கணக்கறிக்கைகள்
கிளிநொச்சி இரணைமடு குள கமக்கார அமைப்புகளின் சம்மேளனமாக செயற்படும் அமைப்பொன்றின் வரவு செலவு தொடர்பான கணக்கறிக்கைகள் கடந்த 8 வருடங்களாக எந்தவொரு ஆய்வுகளுக்கும் உட்படுத்தப்படாமல் காணப்படுகின்றமை தொடர்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டமூலம் கண்டறியப்பட்டுள்ளது.
கட்டாயத்தின் பேரில் அறவிடப்பட்ட பெருந்தொகை நிதி
இரணைமடு குள கமக்கார அமைப்புக்களின் சம்மேளம் என்ற அமைப்பு நன்கொடை என்ற பெயரில் கடந்த சிறுபோகத்தின் போது விவசாயிகளிடமிருந்து பெருந்தொகை நிதிகளை கட்டாயத்தின் பேரில் அறவிட்டிருந்ததாகவும், அதன் கடந்த கால கணக்கு விபரங்கள் வெளிப்படைத்தன்மை இன்றி காணப்படுவதாகவும் விவசாயிகள் பலர் குற்றம்சாட்டியிருந்தனர்.
ஏற்கனவே கடந்த 2016ஆம் ஆண்டு கிளிநொச்சி மாவட்ட பிரதி ஆணையாளரால் பதிவிலக்கம் வழங்கப்பட்டிருந்தாலும் மாவட்ட மட்டத்தில் சம்மேளனம் என்ற ஒரு அமைப்பு மாத்திரமே இருக்க முடியும் எனவும், இதனை சம்மேளனமாக பதிவு செய்ய முடியாது என்பதால் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அமைப்பு பதிவிற்கு உட்படுத்தப்படவில்லை என்பது தகவல் அறியும் சட்டமூலத்தின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத கணக்கறிக்கைகள்
அத்துடன் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் இன்று வரையான காலப்பகுதிகளில் இவ்வமைப்பின் வரவு செலவு தொடர்பான கணக்கறிக்கைகள் வெளிப்படைத்தன்மை இன்றி காணப்படுவதுடன், எந்தவொரு திணைக்களத்தினாலும் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லையென தகவலறியும் சட்டமூலம் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த
அமைப்பானது இரண்டு வகையான கடித தலைப்புக்களை பயன்படுத்தி அறிக்கைகளை
வெளியிட்டு வருகின்றதாகவும் தெரியவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.










எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam
