இலங்கையில் நாளொன்றுக்கு போதைக்கு அடிமையாகும் 8 பேர்: வெளியான புள்ளி விபரம்
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக எட்டு பேர் புதிதாக போதைக்கு அடிமையாகின்றனர் என புள்ளி விபரவியல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
நாட்டில் தற்பொழுது சுமார் 120000 பேர் ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளது.
பாடசாலையை விட்டு இடை விலகியவர்களே அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆண்டு தோறும் சிறைக்குச் செல்லும் கைதிகளின் பெரும்பான்மையானவர்கள் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
போதைப்பொருள் தொடர்பில் கைதாவோரில் குறிப்பிடத்தக்களவு எண்ணிக்கையிலானவர்கள் பெண்கள் என ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
இவ்வாறு போதைப்பொருள் பயன்படுத்தும் பெண்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு போதைப்பொருளுக்கான பணத்தை ஈட்டிக்கொள்கின்றனர் என குறிப்பிடப்படுகின்றது.