யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் 8 பேர் கைது
யாழில் ஆள்ளில்லா வீட்டில் நீண்ட நாட்களாக கொள்ளையிட்டு வந்த 8 பேர் இரவோடு இரவாக யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து 7 இலட்சத்துக்கும் அதிகமான பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
யாழ். வேம்படி பாடசாலைக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றிலே குறித்த திருட்டுச் சம்பவம் இடம்பெற்றிருந்தது.
வீட்டின் உரிமையாளர்கள் வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்ற நிலையில் வீட்டை உறவினர் ஒருவர் பராமரித்து வந்த நிலையில் அங்கு அடிக்கடி திருட்டுக்கள் இடம்பெற்றுள்ளன.
இது தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் யாழ். மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.





சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
