சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிகாரிகள் உள்ளிட்ட 8,603 இராணுவ வீரர்களுக்கு பதவி உயர்வு!
73வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு 337 அதிகாரிகள் உட்பட 8,603 இராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி உயர்வு வழங்கியுள்ளார்.
இதன்படி, 14 பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்கள் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர், 23 கேர்னல்கள் பிரிகேடியர்களின் தரவரிசைக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
35 லெப்டினன்ட் கேர்னல்கள், கேர்னல் தரவரிசையில் உயர்த்தப்பட்டனர், 34 மேஜர்கள், லெப்டினன்ட் கேர்னல்களாக பதவி உயர்வு பெற்றனர்.
206 கேப்டன்கள், மேஜர் பதவிக்கு உயர்த்தப்பட்டனர். 22 லெப்டினன்ட்கள், கேப்டன் பதவிக்கு உயர்த்தப்பட்டனர். இரண்டாம் லெப்டினன்ட்கள் மூவர் லெப்டினன்ட் பதவிக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த பதவி உயர்வுகள் அதிகாரிகளின் மூப்புத்தன்மை, கோவிட் -19 தடுப்பு முயற்சிகள் மீதான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் அவர்களின் திறன்களைக் கருத்தில் கொண்டு வழங்கப்பட்டுள்ளன.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
