துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் குறித்து அமைச்சர் வெளியிட்ட தகவல்!
கடந்த 7 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.
இன்று (09) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் 21 ஆம் திகதி முதல் நேற்று (08) வரை நடந்த துப்பாக்கிச் சூடுகளில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கிச் சூடு
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் 62 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டன. அதே நேரத்தில் 17 மற்றவைகளால் நடத்தப்பட்டன.
இருப்பினும், துப்பாக்கிச் சூடு தொடர்பாக 260 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களில் 229 பேர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவர்களாவர்.
பாதாள உலக குழுவை ஒடுக்குவதற்கு அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும், 2022, 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளைப் பார்க்கும்போது குற்றங்களில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் இல்லை என்றும், அமைச்சர் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த ராசி ஆண்கள் மனைவியை தங்கத்தாலும் வைரத்தாலும் அலங்கரிப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

புறப்பட்ட 5 நிமிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம்: 130 உடல்கள் கருகிய நிலையில் மீட்பு News Lankasri

Optical Illusion:'325' மற்றும் '235' என்ற இலக்கங்களுக்கிடையில் இருக்கும் வித்தியாச எண் என்ன? Manithan

ஏர் இந்தியா விமான விபத்து... கவனத்தை ஈர்க்கும் பிரித்தானியப் பயணியின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு News Lankasri
