இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 77 கிலோ கஞ்சா மீட்பு! படகுடன் இருவர் கைது
இலங்கைக்குக் கடத்த முற்பட்ட 77 கிலோகிராம் கஞ்சாவுடன் பைபர் படகொன்று இந்தியக் கடலோரக் காவல் படையால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். த
மிழகம், பாம்பன் குந்துகால் கடற்கரைப் பகுதியில் திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு மற்றும் இந்தியக் கடலோரக் காவல் படையினர் இணைந்து இன்று(23.11.2026) அதிகாலை மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையின்போதே இந்தக் கஞ்சாப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரண்டு சந்தேகநபர்கள் கைது
இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த 77 கிலோ கஞ்சா மற்றும் ஒரு பைபர் படகு ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பாகத் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் தமிழகம் - மண்டபம் இந்தியக் கடலோரக் காவல் படை முகாமில் வைத்து மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி யுத்தத்தின் போது விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு! சரத் பொன்சேகா வெளியிட்ட தகவல்