மனைவியை கொன்று விட்டு தவறான முடிவெடுத்து உயிரிழந்த முதியவர் - ஆதாரமாக சிக்கிய கடிதம்
கம்பஹா - கிரிந்திவெல பகுதியில் தனது வீட்டில் 75 வயதுடைய மனைவியை கொலைச் செய்து விட்டு, 76 வயதான முதியவரும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கிரிந்திவெல பகுதியில் உள்ள தனது வீட்டில், 75 வயதுடைய தனது மனைவியை கொலைச் செய்து விட்டு, 76 வயதான முதிவரும் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் கிரிந்திவெல - மில்லத்தே பகுதியில் உள்ள கோஹிலகல சாலையில் அமைந்துள்ள தம்பதியினரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
தம்பதிக்கு நேர்ந்த கதி
சம்பவம் தொடர்பான விசாரணையில் பொலிஸாருக்கு இரண்டு பிள்ளைகளின் தந்தையான அந்த முதியவர் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.

அதில், தனது மனைவி கடுமையான நோயால் அவதிப்பட்டு வந்ததாகவும், அதனாலேயே அவரைக் கொன்றுவிட்டுத் தானும் தவறான முடிவெடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது இறப்பிற்குப் பின்னர், தங்கள் இருவரின் உடல்களையும் ஒன்றாக வைக்குமாறும் அந்தக் கடிதத்தில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில், வெயங்கொட பகுதியில் தொடருந்து முன் பாய்ந்து அந்த முதியவர் உயிரிழந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.