விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழா: பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government Sri Lanka Air Force
By Rakesh Mar 08, 2026 06:34 AM GMT
Report

இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் நடைபெறும் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.

இந்த நிகழ்வுகள் இரத்மலானை, இலங்கை விமானப்படை தளத்தில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

விமானப்படைத் தளத்துக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, விமானப்படை மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்.

அதன் பின்னர் கண்காட்சி அரங்குகளைப் பார்வையிட்ட ஜனாதிபதி, வான் சாகசங்களையும் கண்டுகளித்தார். விமானப்படை அருங்காட்சியகத்தில் ஜனாதிபதி சிறப்பு நினைவுக் குறிப்பை இட்டதுடன், இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் பந்து எதிரிசிங்க, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.

பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு

இலங்கை விமானப்படையின் 75 ஆண்டுகால சிறப்புமிக்க சேவையை பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், கல்வி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு வானூர்தி மற்றும் விமான தொழில்நுட்ப அரங்குகளையும் இது கொண்டுள்ளது.

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழா: பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு | 75Th Anniversary Of The Air Force

இலங்கை விமானப்படையின் விமானங்களை மிக அருகில் சென்று பார்க்கவும் அவற்றின் தொழில்நுட்ப விவரங்களைப் பற்றி அறியவும் இது வாய்ப்பை வழங்குவதுடன், விமானப்படையின் அனைத்து தொழில்முறையிலான தனித்தனி அரங்குகள் மற்றும் வான்வழிப் பறப்பிற்காக ஏராளமான இலங்கை விமானப்படை விமானங்கள் மற்றும் சிவில் விமானங்கள் கண்காட்சியில் சேர்க்கப்பட்டுள்ளன.

மேலும், விமானப்படை ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் ஜெட் விமானங்களின் வான்வழி சாகசங்கள், இரவு நேர ட்ரோன் காட்சிகள், விமானப்படை மோப்ப நாய்களின் சாகச நிகழ்ச்சிகள், விமானப்படை விசேட பிரிவினால் மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகள், தீயணைப்புக் காட்சிகள், பரிசூட் காட்சிகள் மற்றும் அங்கம்பொர சண்டை காட்சிகள் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் இதில் உள்ளடங்குகின்றன. இந்தக் கண்காட்சி மற்றும் வான் சாகச நிகழ்வுகளை கடந்த இரண்டு தினங்களாக பிற்பகல் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பொதுமக்கள் கண்டுகளித்துள்ளனர்.

விமானப்படையின் 75 ஆவது ஆண்டு விழா: பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு | 75Th Anniversary Of The Air Force

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அநுர கருணாதிலக, பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண ஜெயசேகர, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொந்தா, மார்ஷல் ஒப் த எயார்போஸ் ரொஷான் குணதிலக, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய உட்பட சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் சிறப்பு அதிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 

GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், சுண்டிக்குளி, Toronto, Canada, New Jersey, United States

17 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US