கொழும்பில் வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீட்டுத் திட்டம்
கொழும்பில் 780 கோடி ரூபாய் செலவில் 730 புதிய வீடுகளை கட்ட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
கொழும்பு மாவத்தை மற்றும் டொரிங்டன் மாவத்தையில் 2 வீட்டுத் திட்டங்களின் கட்டுமானம் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், அவற்றை நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த 2 புதிய திட்டங்களில் கொழும்பு தோட்டங்களில் வசிக்கும் மக்கள் உட்பட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீடுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நகர மறுமலர்ச்சித் திட்டம்
மீண்டும் செயல்படுத்தப்படும் நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் இந்த இரண்டு வீட்டுத் திட்டங்களும் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த இரண்டு வீட்டுத் திட்டங்களும் 730 வீடுகளைக் கொண்டிருக்கும், இவற்றை நிர்மாணிக்க இரண்டரை ஆண்டுகள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு மாவத்தை திட்டம் 615 வீடுகளை கொண்டிருக்கும், அதே நேரத்தில் டொரிங்டன் மாவத்தை வீட்டுத் திட்டம் 115 வீடுகளைக் கொண்டிருக்கும்.
அமைச்சரவை அனுமதி
இந்த திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதி 2026 முதல் 2028ஆம் ஆண்டு வரை ஒதுக்கப்படும்.
இந்த மறுசீரமைப்பு தொடர்பாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அமைச்சரவைப் பத்திரத்தை வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக்க சமர்ப்பித்த நிலையில் அதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீண்டும் செயல்படுத்தப்பட்ட நகர மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், கொழும்பு பகுதியில் சுமார் 15,000 வீடுகளைக் நிர்மாணித்து குறைந்த வருமானம் பெறுபவர்களை வீடமைப்பு அமைச்சு குடியமர்த்தியுள்ளது.



