மன்னாரில் புதையல் தோண்டிய 7 பேர் கைது
மன்னார் (Mannar) - பேசாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் புதையல் தோண்டியதாக கூறப்படும் கடற்படை அதிகாரி ஒருவர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று (18.05.2024) இடம்பெற்றுள்ளது.
கைது நடவடிக்கை
பேசாலை பொலிஸ் பிரிவில் உள்ள சிறுத்தோப்பு காட்டுப்பகுதியில் மன்னார் மற்றும் பேசாலை பொலிஸார் இணைந்து நேற்று (18) மாலை திடீர் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, புதையல் தோண்டிய நிலையில், புதையல் தோண்டும் உபகரணங்களுடன் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் திருகோணமலை கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை அதிகாரி எனவும் ஏனையவர்கள் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் பயன்படுத்திய இரண்டு வாகனங்கள், ஸ்கேனர் இயந்திரம் என்பன பேசாலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேலதிக விசாரணைகளை பேசாலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri