புதுக்குடியிருப்பில் கைப்பற்றப்பட்ட கசிப்பு: 7 பேர் கைது
முல்லைத்தீவு (Mullaitivu)- புதுக்குடியிருப்பு பகுதியில் நடத்தப்பட்ட யுக்திய சுற்றிவளைப்பில் பல குற்றங்களுடன் தொடர்புபட்ட 7 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் 43 லீ்ட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதுக்குடியிருப்பு 9ஆம்,10ஆம் வட்டார பகுதிகளில் பொலிஸார் இராணுவத்துடன் இணைந்து இன்று (04.07.2024) காலை 5.00 மணி தொடக்கம் ஆறு மணி வரை விசேட சுற்றிவளைப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.
நீதிமன்றில் முன்னிலை
இதன்போது, திறந்த பிடியாணை நபர்கள் இருவர், பொலிஸாரினால் ஒருநாள் பிணையில் விடுவிக்கப்பட்ட 3 நபர்கள் மற்றும் திருகோணமலையை சேர்ந்த பல குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவருமாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அதேவேளை, இந்த நடவடிக்கையின் போது சுமார் 43 லீட்டர் கசிப்பும் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கைது செய்த சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

அறிவுக்கரசி பொத்தி பொத்தி வைத்த ஈஸ்வரி வீடியோ ஒருவரிடம் சிக்கியது, யாரிடம் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

15 நாள் காதலன் வீட்டிலும், 15 நாள் கணவர் வீட்டிலும்.., மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றிய கணவர் News Lankasri
