இணைப்பாளர் பதவிகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிவிப்பு

Srilanka Muslim Congress Sri Lanka Eastern Province
By Rukshy Jul 04, 2024 09:46 AM GMT
Report

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடந்த உள்ளுராட்சி மன்றங்களில் தவிசாளர் மற்றும் மேயர் பதவி வகித்தவர்கள் ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கு அமைய கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்படவுள்ள இணைப்பாளர் பதவிகளை பொறுப்பேற்க வேண்டாமென முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகமும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.நிசாம் காரியப்பர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பில் கட்சியின் முன்னாள் உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு விசேட வேண்டுகோளை விடுத்துள்ளார்.

தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

தேர்தல் கால நடவடிக்கைகள் குறித்து வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

உள்ளுராட்சி மன்றங்கள்

இவ்வேண்டுகோளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “முன்னாள் தவிசாளர்கள் மற்றும் மேயர்களுக்கு உள்ளுராட்சி மன்றங்களின் வாகனங்கள் மற்றும் ஏனைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுத்து வருவதாக எனது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இணைப்பாளர் பதவிகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிவிப்பு | Announcement By Sri Lanka Muslim Congress

இது தேர்தல் சட்டத்தை அப்பட்டமாக மீறும் செயலாகும். ஏனெனில் இவர்களில் பெரும்பாலான தலைவர்கள் உள்ளுராட்சி மன்றங்களில் போட்டியிடும் வேட்பாளர்களாக உள்ளனர்,

அவர்களின் வேட்பு மனுக்கள் இன்னும் செல்லுபடியாக உள்ளது. மறுபுறம், இது மூன்று மாதங்களுக்குள் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் உங்களின் ஆதரவைப் பெறுவதற்கான இலஞ்சமாக நாங்கள் கருதுகின்றோம்.

இது மிகவும் தீவிரமான விஷயமாகும். இதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன்.இந்த இணைப்பாளர் பதவிகளை நமது கட்சியைச் சேர்ந்த எந்த உறுப்பினரும் பொறுப்பேற்கக் கூடாது என கட்சித் தலைமையால் எனக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒழுக்காற்று நடவடிக்கை

நமது கட்சியின் உறுப்பினர்களை இவ்வாறான பதவிகளை கொடுத்து தங்களுக்கு சார்பாக மாற்றிக் கொள்ளப்பார்க்கின்றனர். இவ்வாறான ஜனநாயகத்திற்கு எதிரான செயற்பாட்டிற்கு எமது கட்சி ஒருபோதும் துணைபோகாது.

இணைப்பாளர் பதவிகள் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிவிப்பு | Announcement By Sri Lanka Muslim Congress

ஆளுநர் மற்றும் ஜனாதிபதி செயலகத்திற்கு உத்தரவுகளை அனுப்பி இந்த சட்டவிரோத நியமனங்களை உடனடியாக நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையாளருக்கும் கடிதம் மூலம் அறிவித்துள்ளேன்.

கட்சியின் தீர்மானத்தை மீறி நீங்கள் செயற்பட்டால் உங்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹகீம் தான் எந்த விதத்திலும் விலை போகமாட்டேன் என பகிரங்கமாக அறிவித்திருந்த நிலையில் கட்சிக்குள் இவ்வாறு ஏதும் நடந்தால் அது தன் தலையிலேயே மண்ணை வாரிய கதையாக அமைந்து விடுவதாக இருக்கும் எனவும் பரவலாக பேசப்படுகின்றது.

சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த காணொளி

சூர்யகுமார் யாதவின் பிடியெடுப்பு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த காணொளி

தொடர் போராட்டம் நடத்துவோம்: ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

தொடர் போராட்டம் நடத்துவோம்: ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US