பலாலி தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து 67 பேர் வீடுகளுக்கு அனுப்பி வைப்பு
யாழ்ப்பாணம் பலாலி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் தனிமைப்படுத்தல் மையத்தில் இரு வாரங்களாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 67 பேர் இன்று தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பினர்.
யாழ்ப்பாணம் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 52ஆவது தரைப் படைத் தலைமையகம் மற்றும் 521ஆவது காலாட் படைப் பிரிவின் கீழ் பராமரிக்கப்பட்டு வருகின்ற வசாவிளான் தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே வீடு திரும்பினர்.
குறித்த தனிமைப்படுத்தல் மையத்தில் சவூதி அரேபியா, கட்டார், குவைத், சைபிரஸ், ஜோர்தான் ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்த 67 பேர் கடந்த இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தத்தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
கதிர்காமம், காவத்தை, காலி, மற்றும் அம்பாறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தலை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர்.