நச்சுத்தன்மை கொண்ட இருமல் மருந்தினால் 66 குழந்தைகள் பலி! வெளியான காரணம் (VIDEO)
காம்பியாவில் 66 குழந்தைகள் பலியான சம்பவத்திற்கு இந்திய இருமல் மருந்து காரணமா என உலக சுகாதார நிறுவனம் விசாரணை நடத்தி வருகின்றது.
ஜெனீவா, மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர்.
இதற்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தரமற்ற 4 இருமல் மருந்துகள் காரணமாக இருக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும், நச்சுத்தன்மை கொண்ட இந்த மருந்துகள் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வெளியிலும் விநியோகம் செய்யப்பட்டிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66 குழந்தைகளின் உயிரிழப்பிற்கும் இந்த 4 மருந்துகளுக்கும் தொடர்பிருக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "நச்சுத்தன்மை கொண்ட இந்த இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது செய்திகளின் தொகுப்பு,

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
