நாடு தழுவிய சோதனை நடவடிக்கைகள்! ஒரே நாளில் நூற்றுக்கணக்கானோர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளில் 646 பேர் போதைப்பொருள்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாட்டில் போதைப்பொருளை தடுக்கும் நோக்கிலான “முழு நாடுமே ஒன்றாக” எனும் தேசிய திட்டத்தின் கீழ், நேற்று ஞாயிற்றுக்கிழமை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள்
இந்த சோதனை நடவடிக்கைகளின் போது தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் தேடப்பட்டு வந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் 648 விசேட சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேகநபர்கள் வசம் இருந்த பெருமளவிலான போதைப்பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அதன்படி, சந்தேகநபர்களிடமிருந்து 302 கிராம் ஹெரோயின், 375 கிராம் ஐஸ், 448 கிராம் கஞ்சா, 85 ஆயிரத்து 5 கஞ்சா செடிகள், 5 கிராம் குஷ் ரக போதைப்பொருள், ஒரு கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 174 போதை மாத்திரைகள், 45 கிராம் மதனமோதகம் மற்றும் 12 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
உடன் வைத்திய உதவியை நாடவும்! அறிகுறிகளுடன் இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிப்பவர்களுக்கு எச்சரிக்கை