எரிவாயு விலை உயர்வினால் பெரும் நெருக்கடியில் இலட்சக்கணக்கான குடும்பங்கள் - வெளியான தகவல்
எரிவாயு விலை உயர்வால், நாட்டில் எரிவாயுவைப் பயன்படுத்தும் குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் (61,11,315) குடும்பங்களின் வாழ்க்கை நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள்தொகை மற்றும் புள்ளிவிபரத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,
சமையலுக்கு எரிவாயு பயன்பாடு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள மொத்த 661,822 குடும்ப அலகுகளில் 85.5 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.

அதே நேரத்தில், கம்பஹா மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்பங்களில் 66.9 சதவீதம் சமையலுக்கு எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன.
களுத்துறை மாவட்டத்தில், இது மொத்தக் குடும்பங்களின் எண்ணிக்கையில் 55.9 சதவீதமாக உள்ளது. இருப்பினும், நாட்டில் உள்ள வீடுகளில் வசிக்கும் குடும்ப அலகுகளில் 55.3 சதவீதம் பேர் சமையலுக்கான பிரதான ஆற்றல் மூலமாக விறகைப் பயன்படுத்துகின்றனர் என்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை குறிப்பிடுகிறது.
சமையலுக்கு விறகைப் பயன்படுத்தும் மாவட்டங்களில், மொனராகலை மாவட்டம் மிக உயர்ந்த மதிப்பைப் பதிவு செய்துள்ளது. இது சதவீத அடிப்படையில் 83.6 சதவீதமாக உள்ளது. பதுளை மாவட்டத்தில், இது 80.6 சதவீதமாக உள்ளது.
எரிவாயு விலை உயர்வு
இதற்கிடையில், எரிவாயு விலை உயர்வின் காரணமாக, உணவகங்கள் மற்றும் சிற்றுண்டிச்சாலைகளில் உணவுகளின் விலைகளை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என். கே. ஜெயவர்தன, எரிவாயு விலை உயர்ந்தாலும் பேக்கரிப்பொருட்களின் விலைகள் உயர்த்தப்படாது என்று தெரிவித்துள்ளார்.
சந்தையில் பேக்கரிப் பொருட்களின் விலைகள் ஏற்கனவே அதிகமாக இருப்பதாகவும், விலைகள் மேலும் உயர்த்தப்பட்டால்,பேக்கரி பொருட்களின் விலைகளை உயர்த்தாமல், அந்த செலவை பேக்கரி உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்றும் கூறியுள்ளார்.
100 கோடி மரணங்களை ஏற்படுத்தும் அளவுக்கு சக்தி வாய்ந்தது: AI தொடர்பில் பில் கேட்ஸின் எச்சரிக்கை News Lankasri