பல்கலைக்கழக மாணவிக்கு இடையூறு ஏற்படுத்திய 6 இளைஞர்கள் கைது
தொடருந்தில் பயணித்த பல்கலைக்கழக மாணவியொருவருக்கு தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் 6 இளைஞர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த தொடருந்தில் பயணித்த 6 இளைஞர்கள் அதே தொடருந்தில் பயணித்த பல்கலை மாணவியொருவருக்கு பலமுறை தொல்லை கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பல்கலை மாணவி இது தொடர்பில் தனது பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து சந்தேகநபர்கள் ஹட்டன் தொடருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 6 இளைஞர்களும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 20 முதல் 30 வயதுக்குற்பட்டவர்கள் என்பதோடு அவர்கள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்வதற்காக வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இன்று ஹட்டன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தை தமிழ் இனப்படுகொலையாக அங்கீகரியுங்கள் : கோரிக்கை விடுத்துள்ள தமிழ் சிவில் சமூகம்
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri