6 தமிழ்க் கட்சியினரும் ஜனாதிபதி அநுரவுடன் 3 ஆம் திகதி சந்திப்பு
தமிழ் பேசும் மக்களின் ஆறு கட்சிகளினதும் தலைவர்களை எதிர்வரும் மூன்றாம் திகதி திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சந்திப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேரம் ஒதுக்கிக் கொடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு
ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் மூன்று பேர் என்ற அடிப்படையில் 18 தலைவர்கள் வரையில் இந்தச் சந்திப்பில் பங்குபற்றுவர் எனத் தெரியவருகின்றது.

இந்த ஆறு கட்சிகளின் பொது மேடையின் சார்பில் அவற்றின் இணைப்பாளர் ஜனாதிபதியின் செயலாளருக்கு மேற்படி சந்திப்புக்கான கோரிக்கைக் கடிதத்தை அனுப்பி வைத்திருந்தார் என்றும், அதற்கான பதிலை ஜனாதிபதியின் செயலாளர் நேற்று உடனடியாகவே இணைப்பாளருக்கு வழங்கினார் என்றும் ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அந்தப் பதிலிலேயே மேற்படி ஆகஸ்ட் மூன்றாம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு நடைபெறும் என்ற தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாக அறியவந்தது.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 23 மணி நேரம் முன்
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri
சனி - சூரியன் சேர்க்கையால் உருவாகும் அரிய யோகம்: இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட காற்று வீசப்போகுது! Manithan
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri