நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 6 பேர் பலி

Sri Lanka Police Sri Lanka Sri Lankan Peoples Accident Death
By Bavan Sep 19, 2024 03:03 PM GMT
Report

நாட்டின் சில பகுதிகளில் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 14 வயது சிறுமி ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இதற்கமைய, அம்பாறை, காரைதீவு, கிளிநொச்சி, வெயாங்கொடை, கட்டுகஸ்தோட்டை , வவுனியா மற்றும் ஓமந்தை ஆகிய பிரதேசங்களில் குறித்த விபத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

இந்நிலையில், ஏற்பட்ட விபத்து சம்பவங்களின் போது 4 பேரை கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 

றீ(ச்)ஷாவில் சுவைமிக்க மாம்பழங்கள் அறுவடை

றீ(ச்)ஷாவில் சுவைமிக்க மாம்பழங்கள் அறுவடை

வைத்தியசாலையில் அனுமதி 

அம்பாறை, காரைதீவு பொலிஸ் பிரிவிலுள்ள மாவடிப்பள்ளியில் இருந்து சம்மாந்துறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றுடன் குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதிக்கு சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. 

நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 6 பேர் பலி | 6 People Died In Accident In Last 24 Hours

இதன்போது,14 வயது சிறுமி உயிரிந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை செலுத்திய அவரது தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். 

அதேவேளை, கிளிநொச்சியிலிருந்து வட்டக்கச்சி செல்லும் வீதியின் பன்னங்கண்டி பாலத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை வீதியால் சென்று கொண்டிருந்த இளைஞன் மீது டிப்பர் ரக வாகனம் மோதியதில் பன்னங்கண்டி பகுதியை சேர்ந்த அந்தோனி அல்பிரட் அனுஷன் என்ற இளைஞன் உயிரிழந்ததுடன் டிப்பர் வாகன சாரத்தியை கைது செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வவுனியா - ஓமந்தை பொலிஸ் பிரிவிலுள்ள பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி மோட்டார் சைக்கிளில் நேற்றிரவு பிரயாணித்த மோட்டார் சைக்கிள் ஓமந்தை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகில் வீதி ஓரத்தில் துவிச்சக்கரவண்டி ஒன்றுடன் நின்றிருந்வர் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்

சர்வதேச ரீதியாக இலங்கைக்கு கிடைத்த பெரும் அங்கீகாரம்

கைது நடவடிக்கைகள் 

இதன்போது, மோட்டாரில் பிரயாணித்த ஓமந்தை பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 48 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.

நாட்டில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 6 பேர் பலி | 6 People Died In Accident In Last 24 Hours

இதேவேளை, வெயாங்கொடை மினுவாங்கொடை பிரதான வீதியில் 20 மையில்கல் பகுதியில் வீதியை குறுக்காக வந்த பெண் ஒருவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியுள்ளது. 

இந்த விபத்தில் வத்தகா - வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடைய பெண் படுகாயமடைந்த நியைில் மினுவாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்றவரை பொலிஸார் கைது செய்துள்ளடன் கண்டி - யாழ்ப்பாணம் ஏ - 09 வீதியில் கட்டுகஸ்தோட்டை நகரில் பாதசாரி ஒருவர் மீது கார் ஒன்று மோதிய விபத்தில் 71 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்ததையடுத்து கார் சாரதியை கட்டுகஸ்தோட்டை பொலிசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த விபத்து இடம்பெற்ற பிரதேசங்களை சேர்ந்த பொலிஸ் நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

அம்பாறையில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு

அம்பாறையில் நேற்று நள்ளிரவுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டுள்ள பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் முறைப்பாடு

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US