அறுகம்குடா மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் 6 பேர் கைது
தேசிய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் தொடர்பில் வெளிநாட்டவர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
அறுகம்குடா பகுதியில் தாக்குதல் நடத்தப்படக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் கொழும்பில் உள்ள மூலோபாய பொருளாதார இடங்களை புகைப்படம் எடுத்த சம்பவங்கள் தொடர்பான புலனாய்வு அறிக்கைகளை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குழுவில் மாலைத்தீவு நாட்டவர் மற்றும் ஐந்து இலங்கையர்கள் உள்ளடங்குவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
விசாரணை
அவர்கள் அனைவரும் தற்போது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டாலும், அவர்களின் நோக்கங்கள் குறித்து அதிகாரிகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஜனவரி 1ஆம் திகதிக்கு முன் இந்த 9 பொருட்களையும் தயாராக வைத்துக்கொள்ளுங்கள்: பிரித்தானியர்களுக்கு ஒரு அவசர செய்தி News Lankasri
வெள்ளையர்கள்தான் பிரித்தானிய குடிமக்கள்... பிரித்தானியாவில் அதிகரித்துவரும் வலதுசாரிக் கொள்கைகள் News Lankasri