திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 6 பேர் மரணம்
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 6 பேர் மரணித்துள்ள நிலையில் 61 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் வீ.பிரேமானந் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணியகத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூன்று பேரும், உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியில் இரண்டு பேரும், குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய பிரிவில் ஒருவரும், திருகோணமலை மாவட்டத்தில் கடந்த மூன்றாவது அலையில் இன்று வரை 60 பேர் உயிரிழந்துள்ளனர்.
2021- மே மாதம் முதலாம் திகதி தொடக்கம் இன்று 23ம் திகதி வரை திருகோணமலை மாவட்டத்தில் 1,254 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 2020 டிசம்பர் மாதம் தொடக்கம் இன்று வரைக்கும் 2695 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 115 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், 355 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 22 பேர், குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 8 பேர், உப்புவெளி பிரதேசத்தில் எட்டு பேர், கிண்ணியா சுகாதார வைத்தியதிகாரி பிரிவில் 7 பேர், குச்சவெளி சுகாதாரப் பிரிவில் ஏழு பேர், திருகோணமலையில் மூவர், தம்பலகாமம், கோமரங்கடவல மற்றும் கந்தளாய் போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தலா இரண்டு பேர் வீதம் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் மூன்றாவது அலையில் கிண்ணியா சுகாதார பிரிவில் 17 பேரும், திருகோணமலையில் 13 பேரும், உப்புவெளியில் 12 பேரும், குறிஞ்சாங்கேணி சுகாதார
வைத்திய பிரிவில் 9 பேரும், மூதூரில் 5 பேரும், கந்தளாயில் மூவரும்,
குச்சவெளியில் ஒருவரும் இன்று வரை உயிரிழந்துள்ளதாகவும் அவர் மேலும்
தெரிவித்துள்ளார்.
மீண்டும் போரைத் தொடங்க ட்ரம்ப் தயங்க மாட்டார்... ஈரானுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த ஜேடி வேன்ஸ் News Lankasri