இலங்கை கடற்பரப்பில் 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது(Photos)
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 6 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், ஒரு படகும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பLடுகிறது.
யாழ்ப்பாணம் - காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போதே நேற்று(13) குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடற்படையினர் நடவடிக்கை
இதனையடுத்து, கைதுசெய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் மயிலிட்டி துறைமுகத்தில் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மேலும் இந்திய கடற்றொழிலாளர்களை, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக தகவல்: தீபன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 18 மணி நேரம் முன்

சன் டிவியில் எதிர்நீச்சல் சீரியலில் இருந்து இந்த பிரபலம் வெளியேறுகிறாரா?.. ரசிகர்கள் ஷாக் Cineulagam

சிங்கப்பூரில் திடீர் சாலைப் பள்ளம்: காருடன் விழுந்த பெண்ணை., விரைந்து காப்பாற்றிய தமிழர் News Lankasri
