புதுக்குடியிருப்பில் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய இளைஞன் கைது
புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தேவிபுரம் பகுதியில் வீட்டில் பாதுகாப்புக்காக விடப்பட்ட சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்திய சந்தேகத்தில் 19 வயது இளைஞர் ஒருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், புதுக்குடியிருப்பு தேவிபுரம் ஆவன்னா பகுதியில் குறித்த தாயார் சிறுமியினை பாதுகாப்பிற்காக ஒரு வீட்டில் விட்டு விட்டு சென்றுள்ளார்.
எட்டு வயது நிரம்பிய சிறுமி குறித்த வீட்டில் இருந்த வேளை அந்த இளைஞர் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
பொலிஸ் விசாரணை
தாயார் சிறுமியினை வந்து பார்த்தபோது சிறுமியின் நடவடிக்கை தொடர்பில் விசாரித்துள்ள நிலையில் இளைஞனின் நடவடிக்கை தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தினை தொடர்ந்து சிறுமியின் தாயார் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.
அதற்கமைய, புதுக் குடியிருப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு குறித்த இளைஞரை கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்ற உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்.



