வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு இணைத் குழு தலைவரை வழிமறித்து போராட்டம்
வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தியை பிரதேச வளாகத்துக்குள் உள் நுழைய விடாது தடுத்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு அப்பிரதேச மக்கள் பிரதிநிதிகளாகிய உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களை புறக்கணித்து வேலணை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
நேற்று காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்ட குறித்த எதிர்ப்புப் போராட்டத்தால் இணைத் தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதால் பிரதேச செயலக சூழலில் பெரும் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
சுற்று நிரூபம்
குறித்த போராட்டத்தின் போது வேலணை பிரதேச மக்கள் பிரதிநிதிகளான உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் இருவரை தவிர ஏனையவர்கள் அனுமதிக்கப்படாது தடுக்கப்பட்டனர்.
இதை சுற்று நிரூபத்தை காரணம் காட்டி தப்பித்துக்கொள்ள இணைத்தலவர் முற்பட்டவேளை ஏனைய பிரதேச சபைகள் கட்சிக்கு ஓர் உறுப்பினர் அனுமதித்திருந்த நிலையில் இங்கு அரசியல் ரீதியாக பாரபட்சம் காட்டி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இது பிரதேச ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவர் ரஜீவனின் இயலாமையுடன் உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காகவுமே இவ்வாரு சுற்று நிரூபம் பழிசுமக்கின்றது என சுட்டிக்காட்டி, உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உறுப்பினர்களின் வாக்குவாதத்துக்கும் கோரிக்கைக்கும் இணக்கம் தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் பிரதேச இணைத்தலைவர், கூட்டத்திற்கு உறுப்பினர்கள் அனைவரையும் சமுகமளிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நேற்று காலை 10.15 மணிக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர் ஜெயச்சந்திரமூர்த்தி தலைமையில் ஆரம்பமானது.
ஆசன ஒழுங்கு
கூட்டம் ஆரம்பமான நிலையில் கூட்டத்தில் முக்கியஸ்தர்களுக்கான ஆசன ஒழுங்குபடுத்தலில் தவிசாளருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படாத நிலை இருந்ததை சுடிக்காட்டியும் அதற்கான ஒழுங்கை செய்வதற்கு பிரதேச செயலரும் இணைத் தலைவரும் தட்டிக்கழித்தை அடுத்து கூட்டத்தில் மீண்டும் வாக்குவாதம் ஏற்படது.
குறிப்பாக தவிசாளர் அசோக்குமார் தற்போதைய அரசால் வேலணை பிரதேசத்தின் தவிசாளர் பல்வேறு சந்தர்பங்களில் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.
இது அரசின் திட்டமிட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றது. இது இப்பிரதேச மக்களின் எதிர்பார்ப்புக்களை தடுப்பதாகவும் இருக்கின்றது எனவும் உறுப்பினர்களுக்கன முக்கியத்துவம் மதிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் சமூக மட்ட பிரதிநிதிகளை அழைத்திருக்கும் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எமது பிரதேசத்தின் மக்கள் பிரதினிதிகளுக்கு அழைப்பு விடுக்காது மட்டுப்படுத்தும் செயலாகவும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.
இதன்போது பொதுமகன் ஒருவர் கருத்துக்கூற முற்பட்ட வேளை அவரது ஒலிவாங்கி இணைத் தலைவரின் உத்தரவுக்கமைய பறிக்கப்பட்டது. தொடர்ச்சியாக வாக்குவாதங்கள் நடைபெற்ற நிலையில் உறுபினர்கள் அனைவருக்கும் ஆசனங்கள் வழங்கப்பட்டு கூட்டம் தொடர்ச்சியாக நடைபெற்றது.













