ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை: தீவிர கண்காணிப்பில் கனடா
கனடாவின் (Canada) எல்லைக்குள் பிரவேசித்த ஆறு சட்டவிரோத அமெரிக்க (US) குடியேற்றவாசிகளை கனேடிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த ஆறு பேரும் கடுமையான குளிரான காலநிலையிலும் நடந்தே எல்லையை கடந்துள்ளதாக அந்நாட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எமர்சன் பகுதிக்கு அருகே நடந்தே எல்லையை கடக்கும் சிலரை கனேடிய அதிகாரிகள் விமானம் மூலம் பார்வையிட்டுள்ள நிலையில் அவர்களை மீட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
ட்ரம்பின் எச்சரிக்கை
இதன்போது, மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளில் சிலர் உறைபனி வெப்பநிலைக்கு ஏற்றவாறான ஆடைகளை அணியவில்லை என்றும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நோயாளர் காவு வண்டிகள் அழைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதையடுத்து, சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க கனடாவுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அத்துடன், அவர் தனது கோரிக்கைகளுக்கு ஏற்றவாறான வகையில் வரிகளை விதிக்கப்போவதாகவும் எச்சரித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, கனடா ட்ரம்பின் இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையில், 1.3 பில்லியன் டொலர் பெறுமதியான தனது, வான்வழி பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்தது.
இந்நிலையில், பல நாடுகளை சேர்ந்த ஏனைய சட்டவிரோத குடியேற்றவாசிகளையும் அமெரிக்காவை சேர்ந்த ஆறு பேரையும் கைது செய்துள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





சத்தீஸ்கர் வெள்ளத்தில் சிக்கிய தமிழ் குடும்பம்! சுற்றுலா சென்றபோது 4 பேரும் உயிரிழந்த பரிதாபம் News Lankasri

இந்தியா மீது அணுகுண்டு வீச்சு... ட்ரம்பை கொல்ல வேண்டும்: அமெரிக்காவை உலுக்கிய சம்பவத்தில் பகீர் பின்னணி News Lankasri
