ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் ஆரம்பித்துள்ள தந்திரோபாயம்
உலகின் அதி சக்திவாய்ந்த பதவியில் வந்தமர்ந்துள்ள டொனால்ட் ட்ரம்ப், இந்தப் பூமிப்பந்தில் தான் நினைத்ததைச் சாதிப்பதற்கு ஒரு முக்கியமாக தந்திரோபாயத்தைப் பாவித்துவருவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றார்கள்.
ட்ரம்ப் உபயோகித்து வருகின்ற அந்த யுக்தியின் பெயர்: 'Shock and awe'.
'Shock and awe' என்ற தந்திரோபாயத்தின் நோக்கம் என்பது களமுனையில் எதிரியின் அணுமானத்தை செயலிழக்கவைத்து, எதிரி போரிடுவதற்கான விருப்பத்தை இல்லாமல் செய்து, எதிரியைச் சரணடைகின்ற மனநிலைக்கு இட்டுச்செல்வது.
உலகைக் கட்டுப்படுத்துவதற்காக ட்ரம்ப் மற்றும் அவரது குழுவினர் உபயோகிக்க ஆரம்பித்துள்ள இந்தத் தந்திரோபாயம், அவரது பதவிக் காலம் முழுவதும் உலக ஒழுங்கை அமெரிக்காவுக்குச் சாதகமாகப் பேணுவதற்கு மிகப்பெரிய ஆயுதமாக இருக்கும் என்று நம்புகின்றார்கள் ட்ரம்பின் ஆலோசகர்கள்.
'Shock and awe' என்று அழைக்கப்படுகின்ற தந்திரோபாயம் அல்லது யுத்தி பற்றி ஆராய்கின்றது இந்த 'உண்மையின் தரிசனம்' நிகழ்ச்சி: