200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களுடன் 6 பேர் கைது
இலங்கையின் கடற்கரைக்கு அப்பால் ஆழ்கடலில் நடத்தப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது தடுத்து நிறுத்தப்பட்ட ஒரு படகிலிருந்து 100 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் என அழைக்கப்படும் படிக மெத்தம்பேட்டமைன் ஆகிய போதை பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இன்று(12) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஆறு பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக படகில் இருந்த ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தெய்வேந்திரமுனையை சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் தெரு மதிப்பு 200 மில்லியன் ரூபாய்களுக்கும் அதிகம் என்று கடற்படை மதிப்பிடுகிறது.
கைது செய்யப்பட்டவர்கள்; போதைப்பொருட்களுடன் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri

அமெரிக்காவிற்குள் விசா இல்லாமல் நுழைய 41 நாடுகளுக்கு அனுமதி: விதிமுறைகள், ESTA தேவைகள் News Lankasri
