தாக்குதல் சம்பவத்தில் யாழில் கைதான அறுவரும் பிணையில் விடுதலை
முல்லைத்தீவு கள்ளப்பாட்டு பகுதியில் கடந்த 27ஆம் திகதி வீடு ஒன்றுக்குள் நுழைந்த வன்முறைக் கும்பல் ஒன்று, வீட்டிலிருந்தவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியதுடன், வாகனங்கள் இரண்டு மீது தாக்குதல் நடத்தி ஒரு வாகனத்துக்கு தீ வைத்துவிட்டுத் தப்பிச் சென்றிருந்தது.
இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், யாழ்ப்பாணம் மாவட்டக் குற்றத்தடுப்பு பொலிஸாரால் நவாலியில் வைத்துக் கடந்த 07 ஆம் திகதி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அவர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
குறித்த ஆறு சந்தேக நபர்களும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.
பின்னர் நேற்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குறித்த ஆறு பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு குறித்த வழக்கு விசாரணைகள் 2021.11.02 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam
