சற்றுமுன்னர் ரஷ்யாவில் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்
ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் கம்சட்கா தீபகற்பத்தில் வெள்ளிக்கிழமை 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இது அப்பகுதி கடலோரத்தில் அண்மையில் பதிவான தொடர் நில அதிர்வுகளில் ஒன்று என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நிலநடுக்கம்
ரஷ்ய அறிவியல் அகாடமியின் (RAS) ஒருங்கிணைந்த புவியியல் சேவையின் (UGS) பிராந்தியப் பிரிவை மேற்கோள் காட்டி, அரச செய்தி நிறுவனமான RIA Novosti இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

15.4 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மையப்பகுதி கம்சட்கா பிராந்தியத்தின் நிர்வாக மையமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி நகரிலிருந்து சுமார் 183 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
6.3 ரிக்டர்
இந்த நில அதிர்வு துறைமுக நகரமான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கியிலும் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக, ஒருங்கிணைந்த புவியியல் சேவையின் தகவலின்படி, கம்சட்கா கடலோரப் பகுதியில் 06:51 UTC மணியளவில் 5.6 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் பதிவாகியிருந்தது.
அதன் அளவு குறைவாக இருந்தபோதிலும், சில மக்கள் வசிக்கும் பகுதிகளில் அந்த நில அதிர்வு அதிகமாக உணரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri