யாழ்.வடமராட்சி கிழக்கில் மக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்ட காணி சுவீகரிப்பு
யாழ். வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில்
தனியாருக்கு சொந்தமான காணியை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே
சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்தும் 5 வது நாளாக இன்று (28.07.2023) காணி அளவீட்டு
முயற்சி இடம்பெற்ற வேளை மக்கள் காட்டிய எதிர்ப்பால் காணி அளவீடு
நிறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியே இவ்வாறு அளவீடு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவிருந்தது.
எதிர்ப்பு நடவடிக்கை
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் , எம்.ஏ.சுமந்திரன் ,காணி உரிமைக்கான மக்களியக்க பிரதிநிதி இரத்தினசிங்கம் முரளீதரன், வடமராட்சி கிழக்கு மக்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
