மட்டக்களப்பின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வி அபிவிருத்திக்காக இந்த ஆண்டு 529மில்லியன் ரூபா நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆட்சிக்காலத்தில் தேசியபாடசாலைகளுக்கே அதிகளவான நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இம்முறை பல பெருமளவான நிதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்று(10) மாலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

529மில்லியன் ரூபா
அதிபர் எஸ்.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் கல்விக்கு முக்கியத்துவளித்துவருகின்றோம்.
புதிய கல்வி சீரமைப்பினை ஆரம்பித்திருக்கின்றோம்.தரம் ஒன்றிலும் தரம் ஆறிலும் ஆரம்பிப்பதற்கான முயற்சிகளை முன்னெடுத்தோம்.இருந்தபோதிலும் தரம் ஆறின் பாடத்திட்டத்தினை மாற்றியமைப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
கடந்த காலத்தில் தேசிய பாடசாலைகளுக்கு மட்டுமே அதிகளவான நிதிகளை அக்காலத்திலிருந்த ஆட்சியாளர்கள் ஒதுக்கிவந்தார்கள்.
ஆனால் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாகாணசபைகள் ஊடாக 350மில்லியன் ரூபாவும் மத்திய அரசாங்கம் ஊடாக 179 மில்லியன் ரூபாக்களும் மொத்தமாக 529மில்லியன் ரூபாவினை நாங்கள் கல்விக்காக ஒதுக்கீடுசெய்திருக்கின்றோம்.
கட்டிடங்களை திருத்துவதற்காகவும் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப்பற்றாக்குறையினை நிவர்த்திசெய்வதற்காகவும் இந்த நிதியை ஒதுக்கீடுசெய்திருக்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்
இன்னும் பல வேலைத்திட்டங்களை கல்வி அபிவிருத்திக்காக செயற்படுத்தவுள்ளோம். கல்வி என்பது மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் ஒரு சுமையாக அமைந்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக இருக்கின்றது.இம்முறையிலே மாற்றத்தினை கொண்டுவரவேண்டும் என்பதற்கான முன்னுதாரணமான செயற்பாட்டினை முன்னெடுத்துவருகின்றோம். பிரதமர் ஒருபெண்ணாக இருந்து இந்த முயற்சியை முன்னெடுத்துவருகின்றார்.
இந்த நாட்டில் பெண்களுக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திலும் பெண்களுக்கு முக்கியம் வழங்கப்பட்டுள்ளது.நாட்டின் அபிவிருத்தியில் பெண்கள் ஒரு பங்காளராக உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.
பெண்களுக்கான சந்தர்ப்பத்தினையும் வாய்ப்புகளையும் வழங்கி பெண்களை வலுவூட்டுவதற்கான பல விடயங்களையும் முன்னெடுத்துவருகின்றோம்.
பெண்களை பாதுகாக்கின்ற அரசாங்கமாகவும் கல்விக்கு முன்னுரிமையளிக்கின்ற அரசாங்கமாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இருக்கின்றது.
இந்து சமுத்திரத்தில் டியாகோ காசியா தனது முக்கியத்துவத்தை இழக்கிறதா..! 21 நிமிடங்கள் முன்
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri