மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம்! அமெரிக்காவிற்கு மற்றுமொரு சிக்கல்
அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், கியூபா அரசு சுமார் 2,010 கைதிகளை "மனிதநேய அடிப்படையில்" விடுதலை செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
புனித வார (Holy Week) மதக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமெரிக்காவிலுள்ள கியூப தூதரகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல்! முக்கிய தொழிற்துறை வலயத்தில் பாரிய தீப்பரவல்: நச்சு வாயுக்கள் வெளியேறும் அபாயம்
நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறை
விடுவிக்கப்படுபவர்களில் வெளிநாட்டுப் பிரஜைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் அடங்குவர். அவர்களின் நன்னடத்தை மற்றும் உடல்நிலையை அடிப்படையாகக் கொண்டு இந்தத் தேர்வு நடத்தப்பட்டுள்ளது.

கியூபாவில் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த ஆண்டு கியூபா அறிவிக்கும் இரண்டாவது பெரிய கைதிகள் விடுதலை இதுவாகும்.
மறுபுறம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கியூபாவின் கம்யூனிஸ்ட் தலைமைக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
கடுமையான எரிபொருள் பற்றாக்குறை
கியூபாவிற்குச் செல்லும் எண்ணெய் விநியோகத்தை அமெரிக்கா தடுத்துள்ளதால், அந்த நாடு கடுமையான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்தடையைச் சந்தித்து வருகிறது.
கியூப மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளைக் கூட நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

இந்த இக்கட்டான சூழலில், கியூப ஜனாதிபதி மிகுயெல் டயஸ்-கனெல் (Miguel Díaz-Canel) தலைமையிலான அரசு, அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது
இதற்கிடையில், கியூபாவின் பொருளாதாரச் சரிவைத் தடுக்க ரஷ்யா தனது இரண்டாவது எண்ணெய் கப்பலை அனுப்பி உதவி வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்