அவதானமாக செயற்படவும்...! இன்றிரவு 11 மணி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
வளிமண்டலவியல் திணைக்களம் பலத்த மின்னல் தொடர்பிலான எச்சரிக்கை அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (04) நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை இன்று இரவு 11.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னலால் ஏற்படும் அபாயங்கள்
அதன்படி, பிற்பகல் 1.00 மணிக்கு மேல் மத்திய, சபரகமுவ, ஊவா, தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் மற்றும் வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த மின்னல் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது, அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.
மின்னலால் ஏற்படும் அபாயங்களைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.
ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க போர் விமானம்! விமானியை பிடித்தால் பரிசு - நேரடி மோதல் வெடிக்கும் அபாயம்
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri