சுரேஸ் சலே - பிள்ளையானுக்கு புதிய நெருக்கடி! கோட்டாபயவிற்கு எதிராக CID திடீர் நடவடிக்கை!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் யார் யார் தொடர்புபட்டார்கள் என்று விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒரு தொகுதியினருக்கு மாத்திரம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனோடு தொடர்புபட்ட மற்றைய தொகுதினர் யார் என்று விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட போது குற்றவாளிகளுடன் தொடர்புடைய கடந்தகால வாக்குமூலங்கள் இதற்கு ஆதாரமாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது ஈஸ்டர் குண்டுதாக்குதலுடன் தொடர்புபட்ட சாரா ஜஸ்மின் இறந்தாரா இல்லையா என்பது தொடர்பில் நடத்தப்பட்ட டிஎன்ஏ மாதிரிகளில் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த டிஎன்ஏ மாதிரி பின்னர் சாரா ஜஸ்மினுடைய தாயாருடன் பொருந்தியதாகவும் குறித்த தகவல் மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு தெரியவந்நதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஜோசப் பரராஜசிங்கம் வழக்குடன் தொடர்புபட்டு சிறையில் இருந்த பிள்ளையான் வெளியில் இருந்த புலனாய்வாளர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வெளியில் இருந்த புலனாய்வாளர்களுடன் பிள்ளையான் ஏன் நெருங்கிய தொடர்புகளைப் பேணினார் என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இவை தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி....
உயிர்த்த ஞாயிறு வழக்குத் தீர்ப்பு : மறைக்கப்பட்ட பல சர்ச்சைக்குரிய தகவல்களை அம்பலப்படுத்தும் புலனாய்வாளர்....