யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு 526 இலவச மூக்குக்கண்ணாடி வழங்க தீர்மானம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 526 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் திட்டத்தின் கீழ் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.
இதற்கான தெரிவு நிகழ்ச்சியில் நேற்று(14.11.2026) 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் கண் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.
526 மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள்
தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு ஒரு மாதத்திற்குள் இலவச மூக்குக்கண்ணாடிகள் வழங்கப்படவுள்ளன.

ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ், பிரித்தானியாவின் ஸ்ட்ரூட் ரோட்டரி கழகம் மற்றும் விஷ் அறக்கட்டளையின் அனுசரணையுடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் முதலாவது கட்டம் ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும், இரண்டாவது கட்டம் றுஹுணு பல்கலைக்கழகத்திலும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.