புதுக்குடியிருப்பில் இடம்பெற்ற இலங்கை கராத்தே தற்காப்பு கலையின் 50 ஆம் ஆண்டு நிறைவு விழா
இலங்கையின் கராத்தே தற்காப்பு கலை ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டு நிறைவினை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நிகழ்வு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்றையதினம் (25.05.2025) இடம்பெற்றுள்ளது.
400இற்கும் மேற்பட்ட மாணவர்கள்
தற்காப்பு கலையினை இளைஞர்கள் மத்தியில் ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கில் இலங்கை கராத்தே தோ கூட்டமைப்பின் கீழ் முல்லைத்தீவு மாவட்ட கராத்தே தோ சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 09 தற்காப்பு கலை பயிற்சி நிலையங்களை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தற்காப்பு கலையின் செயல் விளக்கத்தினை செய்து காண்பித்திருந்தனர்.
இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

யாழ் இந்திய துணைத்தூதரக உத்தியோகத்தர் ஓமந்தை விபத்தில் பலி - மனைவி உட்பட மூவர் அவசர சிகிச்சைப் பிரிவில்






