5000 ரூபா கொடுப்பனவு மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது
5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதன் மூலம் நாட்டின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப் பெறாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
ஜே.வி.பி.யின் மத்திய செயற்குழு உறுப்பினரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சமந்த வித்தியாரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் 70 வீதத்தினால் பொருட்களின் விலைகளை உயர்த்தி, 2 வீதமான மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்குவதனால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்காது என தெரிவித்துள்ளார்.
மக்களின் வாழ்க்கைச் செலவு இன்று அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக பொய்யான வேலைகளை செய்யாது, உண்மையில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொதுவாக பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
பணவீக்கம் 25 வீதமாக உயர்வடைந்துள்ளது என்பதனை அரசாங்கம் நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.