கண்டாவளை பிரதேசத்தில் 5000 ரூபா வழங்கும் பணிகள் ஆரம்பம்
கோவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களிற்கு அரசினால் வழங்கப்படும் 5000 ரூபா பணம் கண்டாவளை பிரதேசத்தில் ஆரம்பமானது.
குறித்த கொடுப்பனவு சமுர்த்தி பயனாளிகளாக தெரிவு செய்யப்பட்டவர்களிற்கு முதல் கட்டமாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் 5000 ரூபா வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அரசு அறிவித்திருந்தது.
அந்த வகையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளியாக தெரிவானவர்களிற்கான கொடுப்பனவு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வு புளியம்பொக்கனை பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதன்போது 10 பேருக்கு பணத்தொகை வழங்கி வைக்கப்பட்டதுடன், ஏனையவர்களிற்கான கொடுப்பனவுகள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக வழங்கி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri