5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு
5000 ரூபா கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பொன்றை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி வெளியிட்டுள்ளார்.
அதன்படி சமுர்த்தி பெறுவோர் மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ள முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக பயனாளிகளுக்கு 5,000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சமுர்த்தி வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து உரியவர்களுக்கு கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம் |
யாழில் 5000 ரூபா கொடுப்பனவு
இதேவேளை யாழ். மாவட்டத்தில் உள்ள 78,442 சமுர்த்திப் பயனாளிகளுக்கு அரசாங்கத்தின் 5000 ரூபா கொடுப்பனவை வங்கிகளில் வைப்பிலிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சமுர்த்தி பயனாளிகளுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் அதேநேரம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 27, 978 பேருக்கு அரசாங்கத்தின் 5000 ரூபாய் கொடுப்பனவை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு யாழ்.மாவட்ட அரச அதிபர் விடுத்துள்ள அறிவிப்பு |
7500 ரூபா கொடுப்பனவு குறித்து தகவல்
இதன் அடிப்படையில் 1 - 2 நபர்களை கொண்ட குடும்பத்திற்கு 5000 ரூபாயும், 3 நபர்களை கொண்ட குடும்பத்துக்கு 6400 ரூபாவும், நான்குக்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட குடும்பங்களுக்கு 7500 ரூபாவாக சமுர்த்திக் கொடுப்பனவுடன் வழங்கப்படவுள்ளது.
யாழ். மாவட்டத்தில் சுமார் 6000 வயது முதிர்ந்தவர்கள் பட்டியலில் காணப்படும் நிலையில் அவர்களுக்கும் கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.