குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கவுள்ள நிவாரணம்
பொருட்களின் விலையேற்றத்தைக் கருத்திற் கொண்டு குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு நிவாரணம் வழங்கப்படவுள்ளது.
பொருட்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள சமுர்த்தி பயனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் பெறும் 33 இலட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் நிவாரணம் பெறவுள்ளனர்.
உலக வங்கியிடமிருந்து பெறப்பட்ட 300 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதியைப் பயன்படுத்தி குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மூன்று மாத காலத்திற்கு நிவாரணம் வழங்க இலங்கை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
உத்தேசத் திட்டத்தின் கீழ், இம்மாதம் முதல் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா முதல் 7,500 ரூபா வரையிலான நிவாரணத் தொகையை மேற்குறித்த குறைந்த வருமானத்தைக் கொண்ட குடும்பங்களுக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 1,765,000 சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள், 730,000 குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் முப்பத்து மூன்று இலட்சம் (3,300,000) முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுநீரக நோயாளர்களும் இந்நிவாரணத்திட்டத்தினுள் உள்வாங்கப்படவுள்ளனர்.
இதன் முதல் கட்டமாக அடுத்த வாரம் மே மாதத்திற்கான நிவாரணத் தொகையை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 20 மணி நேரம் முன்

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

வெடிமருந்துகளை அகற்றும்போது ஏற்பட்ட வெடிப்பு விபத்து: ராணுவ வீரர்கள் உட்பட 13 பேர் பலி! News Lankasri

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
