இலங்கையில் உள்ள மக்கள் தொடர்பில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஆய்வுத் தகவல்
இலங்கையில் போதைப்பொருள் மற்றும் மது அருந்துவதால் தினமும் சுமார் ஐம்பது பேர் மரணிக்கின்றனர் என மது மற்றும் போதைப்பொருள் தகவல் மையத்தின் நிர்வாக பணிப்பாளர் சம்பத் டி சேரம் தெரிவித்துள்ளார்.
உலகளவில்..
ஒவ்வொரு ஆண்டும் இதனால் இருபதாயிரம் பேர் அகால மரணமடைவதாகவும், உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் 3 மில்லியன் பேர் மரணிக்கின்றனர் எனவும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தால் நடத்தப்பட்ட ஆராய்ச்சி தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
நாட்டில் ஏற்படும் இறப்புக்களில் 83 சதவீதம் தொற்று அல்லாத நோய்களால் ஏற்படுகின்றன.
இறப்புக்களில் 1-4 இறப்புக்கள் மது அருந்துவதால் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியம் (UNDP) நடத்திய ஆராய்ச்சியில்,
அந்த ஆண்டு இலங்கையில் மது அருந்துவதால் ஏற்பட்ட சுகாதார மற்றும் பொருளாதார செலவுகள் ரூ. 237 பில்லியன் என்றும்,ஆனால் குறித்த ஆண்டுக்கான கலால் வருவாய் ரூ. 181.1 பில்லியன் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 மணி நேரம் முன்

உறுதியான பிக் பாஸ் 9 போட்டியாளர்கள் லிஸ்ட்! வாட்டர் மெலன் ஸ்டார் முதல் விக்கல்ஸ் விக்ரம் வரை.. Cineulagam

துபாயில் சிறையில் இருந்து விடுதலையான 19 வயது பிரித்தானிய இளைஞர்: லண்டன் சாலையில் சோகம் News Lankasri
