போதைப் பொருட்களை அடையாளம் காண புதிய அதிகாரிகள் நியமனம்
போதைப் பொருட்களை அடையாளம் காண்பதற்கான புதிய இரசாயன பகுப்பாய்வாளர்கள் 50 பேர் புதிதாக இணைத்து கொள்ளப்படவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
சிறைக் கைதிகளின் வழக்குகள் தொடர்பான பகுப்பாய்வு அறிக்கைகளில் ஏற்படும் தாமதத்தைத் தடுக்கவே இவ்வாறு ஐம்பது அரச இரசாயன பகுப்பாய்வாளர்கள் விரைவில் அரச இரசாயன பகுப்பாய்வாளர் திணைக்களத்திற்கு நியமிக்கப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
அறிக்கைகளில் தாமதம்
போதைப்பொருள் வழக்குகளில் சந்தேக நபர்கள் பயன்படுத்தும் போதை வகைகளை முறையாக அடையாளம் காண அரச பகுப்பாய்வாளரின் உதவி கோரப்படுகிறது, மேலும் அந்த அறிக்கைகளில் தாமதம் ஏற்படுவதற்கான காரணம் அரச பகுப்பாய்வாளர்களின் பற்றாக்குறையாகும்.
அரசு பகுப்பாய்வாளர் அறிக்கைகளை விரைவுபடுத்த இந்த அதிகாரிகள் புதிதாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.
சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்கும் பகுப்பாய்வு அறிக்கைகளில் ஏற்படும் தாமதமே காரணம் என கடந்த காலங்களில் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் வீட்டின் விலை மதிப்பு எவ்வளவு தெரியுமா? இவ்வளவு கோடியா! Cineulagam
