அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்
அரசாங்க ஊழியர்களின் நிர்ணயிக்கப்பட்ட அடுத்தகட்ட சம்பள அதிகரிப்பு, 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் வழங்கப்படும் என அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் மூன்று கட்டங்களாக அதிகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சம்பளத்தின் முதற்கட்டம் இந்த வருடத்தில் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டம் அடுத்த வருடம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அடுத்த 3 ஆண்டுகளுக்கு அரசு ஊழியர் சம்பளத்தை 60-80 சதவீதம் அதிகரித்து மூன்று கட்டங்களாக வழங்கும்.

இந்தாண்டு 30 சதவீத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையில் 30 - 35 சதவீதம் அடுத்த ஆண்டு வரவு செலவு திட்டத்தில் இருந்து செலுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
நாட்டில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 1.4 மில்லியனை நெருங்குகிறது. இந்த சம்பள உயர்வு அரச, கூட்டுத்தாபனங்கள், அரச நிறுவனங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அதிகரிக்கப்பட வேண்டும் என வரவு செலவுத்திட்டத்தில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
அரசு செலவினங்களில் மிகப்பெரிய தொகை அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு உட்பட தொடர்ச்சியான செலவுகளுக்கு செலவிடப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
களமிறக்கப்பட்ட B-52 அணு குண்டுவீச்சு விமானம்... பயணிகள் விமானங்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை News Lankasri
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam