இந்தியாவில் இருந்து கோவிட் தடுப்பூசியை இறக்குமதி செய்ய 50 மில்லியன் டொலர்களை ஒதுக்கிய நிதியமைச்சு
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஒக்ஸே்போர்ட் எஸ்ட்ரா செனெகா என்ற கோவிட் தடுப்பூசி மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ய நிதியமைச்சு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்கியுள்ளது. 9 மில்லியன் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யவே இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தடுப்பூசியை கொள்வனவு செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை ஏற்கனவே எடுத்துள்ளதாக நிதியமைச்சின் செயலாளர் கலாநிதி எஸ்.ஆர். ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
ராஜதந்திர ரீதியில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர், தடுப்பூசியை இலங்கைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கோவிட் தடுப்பூசியை இலங்கைக்கு இறக்குமதி செய்வது தொடர்பில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படுவதாக ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கோவிட் தடுப்பு ராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட மருத்துவ நிபுணர் அமல் ஹர்ச டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.





பெண்கள் பிளான் எல்லாம் சுக்குநூறாக போகிறது, தர்ஷனை காப்பாற்றுவது எப்படி.. எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
