யாழில் பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நேற்றைய தினம் (13.03.2023) முன்னெடுக்கப்பட்டு இந்த கைது நடவடிக்கையில், இரண்டு வாள்கள் மற்றும் களவாடப்பட்ட 3 மூன்று மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த வருடம் பத்தாம் மாதம் காரைநகர் பகுதியிலுள்ள வீடொன்றில் இரண்டு மோட்டார் சைக்கிளில் சென்ற 6 பேர்கொண்ட கும்பல் வீட்டினை சேதப்படுத்தித் தீவைத்து ஒன்றரைக் கோடி ரூபா பெறுமதியான சொத்துக்களைச் சேதப்படுத்தியிருந்தது.
கைது நடவடிக்கை
இதுதொடர்பில் பொலிஸராரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நாவற்குழி பகுதியிலுள்ள எரிபொருள் நிலையம் ஒன்றின் மீது தாக்குதல்கள் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலும் பொலிஸராரினால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி பொ.மேனன் தலைமையின் கீழ் உபபொலிஸ் பரிசோதகர் பிரதீப் தலைமையிலான குழுவினர் இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்துவதற்கென யாழ்ப்பாணம் கச்சேரிப் பகுதியில் அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளைத் திருடி போலி இலக்கத்தகடுகளை மாற்றிப் பயன்படுத்தியமை தெரியவந்ததுள்ளது.
சில போலி இலக்கத்தகடுகளும் வன்முறைச் சம்பவங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்கள் மற்றும் இரண்டு வாள்களையும் கைப்பற்றப்பட்டுள்ளன.
சந்தேக நபர்கள் நவாலி, மானிப்பாய், காரைநகர், விசுவமடு பகுதிகளைச் சேர்ந்த 24
தொடக்கம் 26 வயதுக்கு இடைப்பட்ட சந்தேக நபர்கள் கைதுசெய்யப்டப்டனர்.
மேலும் மூன்று சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

மிகவும் ஆபத்தானவர், நெருங்க வேண்டாம்: தீவிரமாக தேடப்படும் தமிழர் தொடர்பில் லண்டன் பொலிசார் எச்சரிக்கை News Lankasri

இது ரகசியமாக இருக்கட்டும்... லண்டனில் 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய தமிழரின் அருவருக்க வைக்கும் பின்னணி News Lankasri
