வடமராட்சி சாலை கடற்பகுதியில் சட்டவிரோதமாக கடற்றொழிலில் ஈடுபட்ட ஐவர் கைது
வடமராட்சி கிழக்கு சுண்டிக் குளத்திற்கும் சாலைக்கும் இடைப்பட்ட கடற்பகுதியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக ஒளிபாய்ச்சி கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளை இரண்டு படகுகளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்று (07.05.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக சட்ட நடவடிக்கை
சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்தும் நோக்கில் வெற்றிலைக்கேணி கடற்படை கடற்பரப்பில் தொடர் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று சாலை கடற்பகுதியில் வைத்து ஐவரும் சட்டவிரோத கடற்றொழில் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்கள் கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு விசாரணைகளின் பின்னர் உடமைகளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |