வடக்கில் அடையாளம் காணப்பட்டுள்ள மலேரியா தொற்றாளர்கள்!
வடக்கு மாகாணத்தில் இந்த ஆண்டு இதுவரை ஒரு மலேரியா தொற்றாளர் கண்டறியப்பட்டுள்ளதாக மலேரியா தடை இயக்கத்தின் வவுனியா பிராந்திய வைத்திய அதிகாரி வைத்தியர் நிசாந்தினி தெரிவித்தார்.
வவுனியா மலேரியா தடை இயக்கத்தின் பிராந்திய அலுவலகத்தில் இன்று (25.04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை 25 ஆம் திகதி அனுஸ்டிக்கப்படுகிறது. மலேரியா உலக அளவில் இன்றும் முக்கிய பொது சுகாதார பிரச்சினையாகவுள்ளது.
டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத்தில் மோசடி: செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் தீவிர விசாரணை
மலேரியா தொற்று
2024 ஆம் ஆண்டு உலக அளவில் 282 மில்லியன் நோய் தாக்கங்களும், 6 இலட்சம் மரணங்களும் பதிவாகியுள்ளன. இதில் 95 வீதமான மரணங்கள் ஆபிரிக்க பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 5 பேர் மலேரியா தொற்றுக்கு உள்ளாகி இருந்ததுடன் ஒருவர் மரணடைந்துள்ளார்.

ஆபிரிக்கா, தென்னாசியா, தென் அமெரிக்கா பகுதிகளில் இன்னும் மலேரியா தொற்று காணப்படுகிறது.இந்த நோய் தாக்கங்களும், தொற்றுக்களும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்ததன் மூலமே ஏற்பட்டிருந்தது.
வெளிநாடுகளுக்கு செல்பவர்கள், வெளிநாடுகளில இருந்து வருபவர்கள், யாத்திரிகர்கள், சுற்றுலா பயணிகள், வர்த்தகம் நோக்கி செல்பவர்கள் ஆகியோர் தேசிய மலேரியா ஒழிப்பு திட்டம் தொடர்பான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்த முடியும். மக்களின் பங்களுப்பு அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri