வரலாற்றில் இதுவரை இடம்பெறாத விடயம் - நாடே முடங்கும் நிலையென எச்சரிக்கை
அரசாங்கத்தின் அமைச்சர்களும், அதிகாரிகளும் அழகான வார்த்தைகளால் மக்களை ஏமாற்றி வருகின்றதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர மக்கள் காங்கிரஸின் செய்தியாளர் மாநாடு இன்றைய தினம் (26.06.2023) இடம்பெற்றிருந்தது.
இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் இடம்பெறாத விடயம்
மேலும் தெரிவிக்கையில், வரலாற்றில் இது வரை ஞாயிறு தினமன்று நாடாளுமன்றம் கூடியதில்லை. இது என்னவென்று தெரியவில்லை.

அதுவும் ஐந்து நாட்கள் தொடர்ந்து வங்கி விடுமுறை, பங்குச்சந்தைக்கும் பூட்டு. இது நாடே முடங்கும் நிலை என எச்சரித்துள்ளார்.
அத்துடன் உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு என்பது சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவு அல்ல, இது இலங்கை அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan