எவரெஸ்ட் சிகரத்தில் மே மாதத்தில் மட்டும் 5 மலையேற்ற வீரர்கள் உயிரிழப்பு!
உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டில் மலையேறும் பருவ காலம் தொடங்கியுள்ள நிலையில், அங்கு விபத்து மற்றும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்த ஷெர்பா வழிகாட்டியான 21 வயது புரு கியால்ஜென், எவரெஸ்ட் சிகரத்தின் 7,200 மீட்டர் உயரத்தில் உள்ள 'கேம்ப் III' பகுதியில் பனியில் வழுக்கி விழுந்து உயிரிழந்தார்.
கடந்த இரண்டு வாரங்களில் எவரெஸ்டில் நிகழ்ந்த மூன்றாவது மரணம் இதுவாகும்.
உயிரிழப்பு
இதற்கு முன்னதாக, பிஜய் கிமிரே விஸ்வகர்மா (35) மற்றும் லக்பா டெண்டி ஷெர்பா (51) ஆகிய நேபாள மலையேற்ற வீரர்களும் இப்பகுதியில் உயிரிழந்துள்ளனர்.
எவரெஸ்ட் தவிர்த்து அருகிலுள்ள மற்ற சிகரங்களிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

உலகின் ஐந்தாவது உயர்ந்த சிகரமான மக்காலு மலையில் அமெரிக்காவைச் சேர்ந்த 53 வயது ஜோஹன்னசென் ஷெல்லி உயிரிழந்தார். அதேபோல், செக் குடியரசைச் சேர்ந்த டேவிட் ரோன்பினெக் மக்காலு II சிகரத்தில் உயிரிழந்தார்.
பனிச்சரிவுகள்
இதன் மூலம் இந்த மலையேற்ற சீசனில் இமயமலைப் பகுதியில் பலியானவர்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்ந்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இருப்பினும், எவரெஸ்ட் சிகரத்தின் மீதான ஆர்வம் மலையேற்ற வீரர்களிடையே குறையவில்லை.

பனிச்சரிவுகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் சிகரத்தை அடையும் பாதைகள் திறப்பதில் தாமதம் ஏற்பட்ட போதிலும், எதிர்வரும் வார இறுதியில் சிகரத்தை அடையும் இறுதிப் பாதையைச் சீரமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்க தாக்குதலில் இருந்து தப்பிக்க... இரகசியமாக ஈரானுக்கு மிகப்பெரிய உதவி செய்த பாகிஸ்தான் News Lankasri